Paristamil Navigation Paristamil advert login

திணறும் அரச திறைசேரி - €20 பில்லியன் யூரோக்கள் சேமிக்க - இன்று அவசர ஆலோசனை!!

திணறும் அரச திறைசேரி - €20 பில்லியன் யூரோக்கள் சேமிக்க - இன்று அவசர ஆலோசனை!!

28 பங்குனி 2024 வியாழன் 09:41 | பார்வைகள் : 4598


பிரான்ஸ் மிக மோசமான நிதிப்பற்றாக்குறைக்குள் சிக்கியுள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சகத்தில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. 

பிரான்ஸ் கடந்த ஆண்டுகளில் பாரிய பணவீக்கத்துக்குள் சிக்கியதை அடுத்து பிரான்ஸ் நிதி சேகரிப்பில் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு இறுதியில் €10 பில்லியன் யூரோக்களை சேமிக்க திட்டம் ஒன்றை அரசு கொண்டுவந்திருந்தது. ஆனால் அந்த திட்டமும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று மார்ச் 28 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் பொருளாதார அமைச்சகத்தில் (ministère de l'Economie) அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. இதில் €20 பில்லியன் யூரோக்கள் பணத்தினை சேமிப்பது தொடர்பில் கலந்தாசிக்கப்பட உள்ளது. 

பொருளாதார அமைச்சர், நிதி மேலான்மை நிபுணர்கள் என பலர் இதில் கலந்துகொள்கின்றனர்.

அரச திறைசேரியில் மீதம் இருக்கவேண்டிய தொகையினை விட 3% சதவீதம் குறைவாகவே இருப்பதாக (50 பில்லியன் யூரோக்களுக்கும் குறைவாக..) தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்