Paristamil Navigation Paristamil advert login

வேலையில்லாதோருக்கான கொடுப்பனவில் கை வைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை! - கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்!!

வேலையில்லாதோருக்கான கொடுப்பனவில் கை வைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை! - கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்!!

28 பங்குனி 2024 வியாழன் 10:44 | பார்வைகள் : 6241


வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையினை (l’assurance chômage) அரசு தங்களது வரவுசெலவுத் திட்டத்துக்கு ஏற்றால் போல் மாற்றியமைக்க முடியாது என CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று, மார்ச் 27 புதன்கிழமை பிரதமர் கேப்ரியல் அத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, 'வேலை தேடுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைப்பது தொடர்பில் சில கருத்துக்களை முன் வைத்திருந்தார். 

இந்த கருத்து உடனடியாகவே பெரும் விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக தொழிற்சங்கங்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

"இது முறையில்லாதது. கேப்ரியல் அத்தால் இன்று அறிவித்தது வேலைதேடுவோரை வெல்லும் முயற்சி மட்டுமே!' என CGT தொழிற்சங்க இணக்கப்பாட்டாளர் Denis Gravouil தெரிவித்தார்.

அதேவேளை, "வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் அரசின் நிதிச் சரிசெய்தல் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்க முடியாதது!" என CFDT தொழிற்சங்க மேலாளர் Marylise Léon தெரிவித்தார்.

இது தொடர்பாக மரீன் லு பென் தெரிவிக்கையில், "வேலையின்மை காப்பீட்டின் சீர்திருத்தம் என்பது ஒரே ஒரு இலக்கைக் கொண்ட ஒரு மோசடியாகும்: அரசாங்கத்தின் போதாமையால் பற்றாக்குறையில் இருக்கும் அரசின் கணக்குகளை பிணை எடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்!" என கொந்தளித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்