Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

செம்பருத்தி பூக்களால் கிடைக்கும் நன்மைகள்!

செம்பருத்தி பூக்களால் கிடைக்கும் நன்மைகள்!

28 பங்குனி 2024 வியாழன் 12:46 | பார்வைகள் : 11867


இயற்கை நமக்கு பல்வேறு அருமருந்துகளை பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் வடிவில் கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பல் பொருட்களில் நிறைந்து காணப்படும் மருத்துவ குணங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் நோய்களுக்கு நிவாரணமாக இருந்து பெரிதும் உதவுகின்றன.

அந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூக்களில் ஒன்று செம்பருத்தி. இந்த பூக்கள் ஆன்மீகத்தில் வழிபாட்டிற்கு மட்டுமின்றி, நம்முடைய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும் மருந்தாகவும் பயன்படுகிறது. ஆம், செம்பருத்திப் பூக்களில் உள்ள மருத்துவ குணங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்க கூடியவை…

செம்பருத்திப் பூக்கள் நமக்கு உடல் ஆரோக்கியத்தை குறிப்பாக முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். சமீப காலமாக பெண்களின் கூந்தல் பராமரிப்பு, அலங்காரம் போன்ற விஷயங்களில் செம்பருத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. செம்பருத்திப் பூக்களில் மருத்துவ குணங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, முடி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கூடியது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஆன்மீக பயன்பாடு... குறிப்பாக செம்பருத்தி பூக்கள் தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை பெண்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களை பூஜிக்கவும், வழிபடவும் பயன்படுத்துகிறர்கள். குறிப்பாக லட்சுமி தேவி பூஜையில் இந்த மந்தார பூக்கள் கண்டிப்பாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் உடல்நல முக்கியத்துவமும் கொண்ட இந்த செம்பருத்தி பூக்கள் குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும். ஒருசில சீசனில் இவை குறைவாகவே கிடைக்கும். கண்களை கவரும் வண்ணத்தில் மலர்களை தரும் செம்பருத்தி செடி ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க ஏற்ற ஒன்று.

செம்பருத்தி மரங்களில் பல வகைகள் உண்டு. ஆனால் சில வகையான செம்பருத்தி மரங்கள் எந்த வீட்டிலும் காணப்படுவதில்லை. இத்தகைய செம்பருத்தி பூ வகைகளில் லம்ப் ஹிபிஸ்கஸ், விங்ட் ஹிபிஸ்கஸ் மற்றும் பல வகையான செம்பருத்திக்கள் உள்ளன. அடிலாபாத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருமான டாக்டர் ஜக்குலா நரேந்தர் செம்பருத்தியின் சில நன்மைகள் பற்றி குறிப்பிட்டார்.

கூந்தல் ஆரோக்கியம்: மயிர்க்கால்களை வலுவாக வைத்திருக்கவும், நரை முடியை தடுக்கவும் இந்த செம்பருத்தி பூக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். செம்பருத்தி ஆயில் ஹேர் டானிக் போல் செயல்படுவதாகவும், தற்போது செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் பல வகையான எண்ணெய்கள் கடைகளிகள் கிடைப்பதாகவும் டாக்டர் ஜக்குலா கூறினார்.

உடல் ஆரோக்கியம்: செம்பருத்தி பூக்களை கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். தவிர இந்த டீ பருகுவதால் அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தம் குறைந்து கட்டுக்குள் வரும் என்றார். பல்வேறு இடங்களில் பரவலாகக் கிடைக்கும் செம்பருத்திப் பூக்களின் மருத்துவக் குணங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யப்படுத்த கூடியவை என்றார்.76u8i

வர்த்தக‌ விளம்பரங்கள்