சுகாதாரக் காப்பீடுகளில் மோசடி! - சென்ற ஆண்டு 466 மில்லியன் யூரோக்கள் இழப்பு!
29 பங்குனி 2024 வெள்ளி 06:00 | பார்வைகள் : 4680
சென்ற 2023 ஆம் ஆண்டு ‘சுகாதாரக் காப்பீடுகளில்’ (nationale d'Assurance maladie) 466 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையானது முந்தைய 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55% சதவீதத்தால் அதிகமாகும். இந்த காப்புறுதி நிறுவனங்களில் மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு இது தொடர்பான பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. 200 சுகாதார நிலையங்கள் கண்காணிக்கப்பட்டன.
இந்தபோதும் மோசடி செய்யப்பட்ட தொகை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகும்.
சென்ற ஆண்டு மட்டும் இந்த துறையை கண்காணிக்க 1,500 பேரினை பணிக்கு நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.