பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகவில்லை! - கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி முடிவு!!
.jpg)
29 பங்குனி 2024 வெள்ளி 08:00 | பார்வைகள் : 10242
பிரான்சில் வசிக்கும் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் ‘ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கு பிரான்ஸ் தயாராகவில்லை!” என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அது தொடர்பான போதிய விபரங்கள் மக்களிடையே பகிரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. JDD ஊடகத்துக்காக l’Institut CSA ஊடகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் ”இந்த கோடை காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த பிரான்ஸ் தயராக இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா..?!” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, 52% சதவீதமான மக்கள் (இரண்டில் ஒருவருக்கும் அதிமானோர்) ‘பிரான்ஸ் தயாராகவில்லை’ என நம்புவதாக தெரிவித்துள்ளனர். 47% சதவீதமானவர்கள் ‘தயாராக இருக்கிறது!’ என தெரிவித்துள்ளனர். மீதமான 1% சதவீதமான மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த கருத்துக்கணிப்பானது மார்ச் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,013 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1