Paristamil Navigation Paristamil advert login

20 வீடுகளை 'பாலியல் தொழிலுக்கு' வாடகைக்கு விட்ட ஒருவர் கைது!

20 வீடுகளை 'பாலியல் தொழிலுக்கு' வாடகைக்கு விட்ட ஒருவர் கைது!

29 பங்குனி 2024 வெள்ளி 10:30 | பார்வைகள் : 9107


80 வயதுடைய ஒருவர் அவருக்குச் சொந்தமான 20 வீடுகளை பாலியல் தொழிலுக்காக வாடகைக்கு விட்டுள்ளார். அவர் இம்மாத நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Papito Michel என புனை பெயர் வைத்து அழைக்கப்படும் குறித்த முதியவர், Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள அவரது இருபதற்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இணையதளமூடாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை பிடித்து, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் சிலர் மேற்படி வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் மேற்குறித்த வீடுகளுக்கு வழமைக்கு மாறான அதிக தொகையினை வாடகையாக பெற்றுள்ளார்.

அவர் கடந்த மார்ச் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக்கணக்கில் இருந்த €315,000 யூரோக்கள் பணம் இருந்ததாகவும், அவற்றின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்