Paristamil Navigation Paristamil advert login

மட்டன் கோலா உருண்டை

மட்டன் கோலா உருண்டை

29 பங்குனி 2024 வெள்ளி 10:41 | பார்வைகள் : 1819


சுவையான மொறுமொறு மட்டன் கோலா உருண்டை எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

மட்டன் கொத்துக்கறி - 500 கிராம்

முட்டை - 1

துருவிய தேங்காய் - 1/4 கப்

பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4 பல்

இஞ்சி துண்டு - 1

முந்திரி - 5 - 6

கிராம்பு - 4

சோம்பு - 1 டீஸ்பூன்

கச கசா – 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் முந்திரி பருப்பு, சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தற்போது இதனுடன் கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்னர் இறுதியாக இதனுடன் மட்டன் கொத்து கறியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் 15 நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறிவிட வேண்டும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வதக்கிய அனைத்தையும் நன்கு ஆறவிடுங்கள்.

இவை நன்கு ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

தற்போது அரைத்த கலவையை ஒரு சுத்தமான பௌலில் மாற்றி கொள்ளுங்கள்.

பின்னர் அதிலிருந்து சிறிதளவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து உருண்டை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை போட்டு பொரித்து கொள்ளவும்.

உருண்டை நன்கு வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து தட்டிற்கு மாற்றவும்.

அவ்வளவுதான் சுவையான மொறுமொறு செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை சாப்பிட ரெடி…

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்