Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக இணையும் 46 நாடுகள்!

ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக இணையும் 46 நாடுகள்!

29 பங்குனி 2024 வெள்ளி 17:35 | பார்வைகள் : 11123


பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகாலின் போது பாதுகாப்பில் ஈடுபட 46 நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினர் பிரான்சுக்கு வருகை தர உள்ளனர்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்ததை அடுத்து 46 நாடுகளில் இருந்து 2,185 காவல்துறையினர் இந்த இரு மாதங்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். போலந்து நாட்டு காவல்துறையினர்  மிக விரைவில் பரிசுக்கு வருகை தரவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Wladyslaw Kosiniak-Kamysz தனது X (Twitter) பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். 

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், பிரான்சில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதாகவும், அதை அடுத்தே இதுபோன்ற சர்வதேசத்தின் உதவியினையும் பிரான்ஸ் நாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்