இன்டர் மியாமி அணியில் இணைந்த மெஸ்ஸி
16 ஆடி 2023 ஞாயிறு 09:05 | பார்வைகள் : 3998
அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இணைந்து கொள்ளவுள்ளார்.
அந்த அணி இதனை காணொளி வெளியிட்டு உறுதி செய்துள்ளது .
தாம் இன்டர் மியாமி அணியில் இணையவிருப்பதாக மெஸ்ஸி அறிவித்து சுமார் ஐந்து வாரங்களுக்கு பின்னர், சனிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்டு அந்த அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
மேலும், Fort Lauderdale விளையாட்டு அரங்கில் ஞாயிறன்று அவரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாகவும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சியில் ஈடுபடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர் மியாமி அணி நிர்வாகம் இரண்டரை ஆண்டுகளுக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுக்கு 50 முதல் 60 மில்லியன் டொலர் வரையில் ஊதியமாக வழங்க உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக தொகையாக மட்டும் 150 மில்லியன் டொலர் வரையில் மெஸ்ஸி கைப்பற்ற இருக்கிறார்.
விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மெஸ்ஸி தெற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து உடல் தகுதி மற்றும் ஒப்பந்த வேலைகள் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
7 முறை Ballon d’Or விருதை வென்றுள்ள மெஸ்ஸி, கடந்த 2 ஆண்டு காலம் Paris Saint-Germain அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.