Paristamil Navigation Paristamil advert login

காசாவில் வான்வழித் தாக்குதல்...! 42 பேர் பலி

காசாவில் வான்வழித் தாக்குதல்...! 42 பேர் பலி

30 பங்குனி 2024 சனி 08:13 | பார்வைகள் : 5378


சிரியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சிரிய படை வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

அலெப்போ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லெபனானின் ஹெஸ்பொல்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் களஞ்சியத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலெப்போ மாகாணத்தில் ஏனைய இடங்களில் ஈரான் சார்பு குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பாதுகாப்பு தொழிற்சாலைகளை குறிவைத்து இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்பட்டுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து நாளொன்றில் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை நேற்று 29.03.2024 பதிவாகியுள்ளது.

ஆனால், இது சிரியாவில் பதிவாகியுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க போவதில்லையென இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரிய படைகளும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதால் இத்தாக்குதலுக்கு சிரியா எதிர்வினையாற்றுமா என கேள்விகளும் எழுந்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்