Paristamil Navigation Paristamil advert login

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் சாதனை படைத்த இலங்கை வீரர்

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் சாதனை படைத்த இலங்கை வீரர்

30 பங்குனி 2024 சனி 12:06 | பார்வைகள் : 4375


இலங்கை வீரர் தனஞ்செய டி சில்வா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா முதல் இன்னிங்சில் 102 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 108 ஓட்டங்களும் எடுத்தார்.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5வது வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அத்துடன் தரவரிசைப் பட்டியலில் 15இடங்கள் முன்னேறி 14வது இடத்தைப் பிடித்துள்ளார். தனஞ்செய டி சில்வா டெஸ்ட்டில் 12 சதங்கள் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்