Paristamil Navigation Paristamil advert login

 உக்ரைனில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

 உக்ரைனில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

30 பங்குனி 2024 சனி 13:19 | பார்வைகள் : 3928


ரஷ்யா உக்ரைன் மீது 99 ‘டிரோன்’ தாக்குதல்களை நடத்திய நிலையில் உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்டுள்ளது. ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. 

போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை.

மாறாக இருதரப்பும் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் ரஷியா கடந்த சில வாரங்களாக உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மின்இணைப்பு தடைப்பட்டு 7 லட்சத்துக்கும் அதிமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷியா நேற்று ஒரே நாளில் உக்ரைன் மீது 99 'டிரோன்' தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் ரஷியாவின் டிரோன் தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்ததுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்