Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெள்ளம் : இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

31 பங்குனி 2024 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 4542


வெள்ளம் காரணமாக நேற்று சனிக்கிழமை Indre-et-Loire மற்றும் Vienne ஆகிய இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘சிவப்பு’ எச்சரிக்கை’ (vigilance rouge) இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது.



Indre-et-Loire மற்றும் Vienne மாவட்டங்களில் நேற்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதிகள் அனைத்தும் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டது. அத்தோடு கடைகள், வணிக நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் நுழைந்தது.

இந்நிலையில், இன்று மார்ச் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் இந்த அனர்த்தம் தொடர்வாக Météo-France அறிவித்துள்ளது.

அதேவேளை, Gironde, Dordogne, Charente-Maritime மற்றும் Charente ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக ‘செம்மஞ்சள் எச்சரிக்கை’ (vigilance orange) விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Alpes-Maritimes மாவட்டத்துக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்