ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்து - ஐவர் பலி

31 பங்குனி 2024 ஞாயிறு 04:35 | பார்வைகள் : 9067
ஐப்பானில் தடை செய்யப்பட்ட மருந்தை உட் கொண்ட 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.
இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 22 ஆம் திகதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது.
எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 100 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1