Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க பாலத்தில் மோதிய கப்பல் - அகற்றும் பணிகள் ஆரம்பம்

 அமெரிக்க பாலத்தில் மோதிய கப்பல் - அகற்றும் பணிகள் ஆரம்பம்

31 பங்குனி 2024 ஞாயிறு 04:45 | பார்வைகள் : 3036


அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன. 

படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர் நீளமான பாலமொன்றின் மீது  கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கைக்கு வரவிருந்த கப்பலொன்றே பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கப்பலின் திசை மாற்று கருவி இயங்கவில்லை எனவும் 5 சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

289 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பல் போல்டிமோர் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் அதன் முழு மின்சாரத்தையும் இழந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கப்பலில் உள்ள சில கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளன. 

கப்பலை அகற்றுவதற்காக இரண்டு இயந்திரங்களின் உதவி அவசியமாக உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்