Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் 'கோட்' மற்றும் 'எல்.ஐ.சி?

ஒரே நாளில் 'கோட்' மற்றும் 'எல்.ஐ.சி?

31 பங்குனி 2024 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 4816


தளபதி விஜய் நடிக்கும் ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதே படத்தில் விக்னேஷ் சிவன் தனது ’எல்ஐசி’ படத்தின் டீசரை வெளியிட திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இது விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தான் விஜய் பிறந்த நாளில் டீசர் மற்றும் ஆகஸ்ட் மாதம் ட்ரைலர் அதனை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தை வெளியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால் ஒரே நாளில் ’கோட்’ மற்றும் ’எல்ஐசி’ ஆகிய படங்களில் அப்டேட்டுகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டுக்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளதால் ஏப்ரல் மாதம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்துகள் அடுத்தடுத்து காத்திருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்