Paristamil Navigation Paristamil advert login

பிரட் உப்புமா

பிரட் உப்புமா

31 பங்குனி 2024 ஞாயிறு 09:42 | பார்வைகள் : 1685


காலை நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக விரைவாகவும், சுவையாகவும் பிரட் வைத்து எளிய செய்முறையில் உப்புமா செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையானப் பொருள்கள் :

பிரட் துண்டு - 5

பெரிய வெங்காயம் - 1 (பெரியது)

பச்சை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்

முந்திரி - 10

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டுக்கொள்ளுங்கள்.

இவை நன்கு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

இவை அனைத்தும் பொன்னிறமாக வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

அனைத்தும் நன்றாக கலந்து வெந்தவுடன் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பிரட் உப்புமா சாப்பிட ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்