இத்தாலியில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்பில் ஆய்வு தகவல்
31 பங்குனி 2024 ஞாயிறு 11:58 | பார்வைகள் : 4047
இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது.
ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
நாட்டில் 2023ல் 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன.
முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.