Paristamil Navigation Paristamil advert login

‘சிவப்பு எச்சரிக்கை!’ - நாற்பது ஆண்டுகளின் பின்னர் பெருவெள்ளம்!

‘சிவப்பு எச்சரிக்கை!’ - நாற்பது ஆண்டுகளின் பின்னர் பெருவெள்ளம்!

1 சித்திரை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 6188


பிரான்சின் மேற்கு மத்திய நகரங்களை கடந்த நான்கு நாட்களாக பெரு வெள்ளம் பீடித்துள்ளது. 1982 ஆம் ஆண்டின் பின்னர் அங்கு வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Indre-et-Loire மற்றும் Vienne ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் இன்று மூன்றாவது நாளாக வெள்ளம் காரணமாக ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. 

Vienne, Haute-Vienne மற்றும் Indre-et-Loire ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ‘தேசிய பேரிடர்’ (catastrophe naturelle) ஏற்பட்ட மாவட்டமாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். 

அதேவேளை, அங்குள்ள Vienne ஆற்றில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது. நேற்று மார்ச் 31 ஆம் திகதி மாலை 5 மணி நிலவரப்படி 9.02m மீற்றராக பதிவானது. முன்னதாக பதிவான அதிகபட்ச நீர்மட்டம் 1982 ஆம் ஆண்டு பதிவான 8.62 மீற்றராகும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்