Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவின் வெஸ்ட் பே-வில் நிலச்சரிவு! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

பிரித்தானியாவின் வெஸ்ட் பே-வில் நிலச்சரிவு! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

12 ஆவணி 2023 சனி 09:16 | பார்வைகள் : 5484


பிரித்தானியாவின் புகழ்பெற்ற  டோர்செட் வெஸ்ட் பே(Dorset West Bay) கடற்கரையில் உள்ள பாறை முகட்டின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்துள்ளது.

மேலும் இந்த திடீர் மண் மற்றும் பாறை சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பி ஓடியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த நிலச்சரிவின் போது பாறைகள் மற்றும் மண் தொகுப்புகள் கடலில் விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

டோர்செட் வெஸ்ட் பே  சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் கவுன்சில் வெளியிட்ட ட்வீட்டில், "பாறை சரிவு மற்றும் நிலச்சரிவுகள் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம்".

"அங்கிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் தென் மேற்கு கடற்கரையின் மலை உச்சிக்கு செல்வதற்கான வழி தற்போது அடைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வீடியோவிற்கு கருத்து பதிவிட்டுள்ள நபர் ஒருவர், எனக்கு பிடித்த மகிழ்ச்சியான இடம், இதைப் பார்க்கும் போது என்னுடைய இதயம் உடைகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்