Paristamil Navigation Paristamil advert login

புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

1 சித்திரை 2024 திங்கள் 08:02 | பார்வைகள் : 6312


இன்று ஏப்ரல் 1 ஆம் திகதி. இந்த புதிய மாதத்தில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது.

☯ காப்புறுதி பற்றுச்சீட்டு தேவையில்லை!

இன்று முதல் உங்கள் வாகனங்களின் காப்புறுதி பற்றுச்சீட்டுக்களை காட்சிப்படுத்த தேவையில்லை. இதுவரையில் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த இந்த பச்சை நிற காப்புறுதி சீட்டு, இனிமேல்  இலக்கத்தடுடன் தானியங்கி முறையில் இணைக்கப்படும். 

☯ சமூகநல கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

இன்று முதல் சமூகநல கொடுப்பனவுகள் (RSA) அதிகரிக்கப்படுகிறது. அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 4.6% சதவீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. 

☯ trêve hivernale!!

குளிர்காலத்தின் போது வாடகை செலுத்தவில்லை எனும் காரணத்தினால்   வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது எனும் சட்டம் (trêve hivernale) முடிவுக்கு வந்துள்ளது.  நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான இந்த சட்டம் ஐந்து மாதங்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

☯ contrôle technique!

வாகனங்களுக்கான தொழிற்நுட்ப பரிசோதனைகள் (contrôle technique) தற்போது மோட்டார் சைக்கிள்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்துக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட துண்டு அவசியமானதாகும். இன்று ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வருகிறது. மீறினால் €135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும்.

☯  Parcoursup இறுதி திகதி!!

உயர்கல்வி பயில உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களது பெயர்களை இணைத்துக்கொள்ள இம்மாதம் 3 ஆம் திகதி வரை (ஏப்ரல் 3) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு மிக கட்டாயமான ஒன்றாக இருக்கும் இதன் முன்பதிவுகள் மே 30 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.  

பிரான்சில் 23,000 பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுகள் மேற்படி தளமூடாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்