Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியின் 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த இலங்கை!

இந்திய அணியின் 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த இலங்கை!

1 சித்திரை 2024 திங்கள் 08:39 | பார்வைகள் : 1623


டெஸ்ட் போட்டியில் எந்த வீரரும் சதம் அடிக்காமல், 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த இந்திய அணியின் சாதனையை இலங்கை முறியடித்தது.

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகிறது. சாட்டோகிராமில் நடந்து வரும் இப்போட்டியில், இலங்கை அணி முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

நிசங்கா 57 ஓட்டங்களும், கருணாரத்னே 86 ஓட்டங்களும் எடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 93 ஓட்டங்கள் எடுத்து சதத்தினை தவறவிட்டார்.

மேத்யூஸ் 23 ஓட்டங்களில் வெளியேற, சண்டிமல் (59), தனஞ்செய டி சில்வா (70) மற்றும் கமிந்து மெண்டிஸ் (92) ஆகியோரும் அரைசதம் விளாசினர். 

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில், எந்த வீரரும் சதம் அடிக்காமல் இந்திய அணி 524 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. 

இந்த 48 ஆண்டுகால சாதனையை இலங்கை அணி 531 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் முறியடித்துள்ளது. 

சதம் இல்லாமல் அதிக ஸ்கோர் குறித்த அணிகள்
இலங்கை - 531 (2024)
இந்தியா - 524/9 Dec (1976)
அவுஸ்திரேலியா - 520/7 Dec (2009)
தென் ஆப்பிரிக்கா - 517 (1998)
பாகிஸ்தான் - 500/8 Dec (1981)  
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்