இஸ்லாமிய மதகுரு பிரான்சில் பயிற்சிகள் வழங்க தடை!
1 சித்திரை 2024 திங்கள் 10:40 | பார்வைகள் : 4690
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இஸ்லாமிய மதகுருமார்கள் (இமாம்) பிரான்சில் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்த இந்த சட்டம், இன்று ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இஸ்லாமிய மாணவர்களிடம் மதத்தை வைத்து பயங்கரவாத சிந்தனைகளை தோற்றுவிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த சட்டத்தினை அரசு கொண்டுவந்துள்ளது.
அதேவேளை, ரம்ஜான் நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை, பிரசங்கங்களை நிகழ்த்துவதற்கு பிரான்சுக்கு இமாம்களை அழைத்துவருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு Mureaux (Yvelines) நகரில் வைத்து இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.