தொலைந்துபோன நாயை மூன்று வருடங்களின் பின் கண்டு பிடித்த குடும்பம்
12 ஆவணி 2023 சனி 09:24 | பார்வைகள் : 2022
அமெரிக்காவில் தொலைந்துபோன நாயை அதன் உரிமையாளர்கள் மூன்று வருடங்களின் பின்னர் மைக்ரோ சிப் மூலம் கண்டுபிடித்த சம்பவம் நெகிழவைத்துள்ளது.
டெக்சாஸ் பகுதியை சேர்ந்த சுமித் என்பவர் ஜில் என பெயரிடப்பட்ட நாயை பாசமாக வளர்த்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாய் தொலைந்து போனது.
இதனால் சுமித்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் நாய் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சமூக வலைதளங்களிலும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினர்.
ஆனாலும் நாய் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த நாய் மீது மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலமும் தேடிய நிலையில், சமீபத்தில் சுமித் குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் அவர்களது வளர்ப்பு நாய் ஜில் இருக்கும் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற அவர்கள் தங்கள் நாயை மீட்டனர்.
மைக்ரோ சிப் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு நாய் மீண்டும் கிடைத்ததால் அதன் உயிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.