Paristamil Navigation Paristamil advert login

யாழில். ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பியவர் உயிரிழப்பு

யாழில். ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பியவர் உயிரிழப்பு

1 சித்திரை 2024 திங்கள் 12:00 | பார்வைகள் : 7233


ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று வழிபட்ட பின்னர் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்