சுவிட்சர்லாந்து சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்!
12 ஆவணி 2023 சனி 09:35 | பார்வைகள் : 6230
சுவிட்சர்லாந்தில் உலகின் நீண்ட ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது.
இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள Gotthard Base Tunnel, உலகிலேயே நீளமான ரயில்வே சுரங்கப்பாதையாகும்.
அது, ஆல்ப்ஸ் மலையின் ஊடாக அமைக்கபட்டுள்ளது.
அந்த சுரங்கப்பாதையின் நீளம் 57 கிலோமீற்றர் ஆகும்.
அந்த ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மீண்டும் அந்த பாதையில் போக்குவரத்து ஆரம்பமாக, 16 ஆம் திகதி வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாதையில் ரயில் தடம் புரண்டதால், மாற்றுப்பாதை ஒன்றில் சில பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், பயணிகள் கூடுதலாக ஒரு மணி நேரம் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.