அவதானம்! - ’50 யூரோ’ மோசடிக்காரர்களிடம் சிக்கவேண்டாம்! - காவல்துறையினர் விடுக்கும் எச்சரிக்கை!
2 சித்திரை 2024 செவ்வாய் 06:16 | பார்வைகள் : 6758
’50 யூரோ’ மோசடிக்காரர்களிடம் சிக்கி உங்கள் உடமைகளை இழக்கவேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிகவும் பழைய முறையிலான கொள்ளை முயற்சி தான். இருந்தபோதும் அது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி தேசிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மோசடிக்காரர்கள் உங்கள் மகிழுந்தின் முன் கண்ணாடியின் déposent இற்கு கீழ் 50 யூரோ பணத்தாளினை வைத்துவிட்டு அருகில் மறைந்துகொள்கிறார்கள்.
மகிழுந்துக்குள் நீங்கள் ஏறியதும் தான் கண்ணாடியில் பணத்தாள் இருப்பதை கவனிக்கின்றீர்கள். அந்த பணத்தாளில் உந்தப்பட்டு நீங்கள் அதனை எடுக்கும் நோக்கில் மகிழுந்தை விட்டு வேகமாக இறங்குகின்றீர்கள்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மறைந்திருந்த கொள்ளையர்கள், மகிழுந்துக்குள் இருக்கும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்று இவ்வருட ஆரம்பம் முதல் எண்ணற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். சென்ற 2023 ஆம் ஆண்டில் 70,649 உடமைகள் இதுபோன்று திருடப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் 63,565 உடமைகள் இதுபோல் திருடப்பட்டுள்ளன.
இந்த ‘50 யூரோ’ மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்! (வாடகை வீடு, RSA கொடுப்பனவுகள், வாகன காப்புறுதிகளில் மாற்றம்..)