Paristamil Navigation Paristamil advert login

▶ RSA கொடுப்பனவுகள் அதிகரிப்பு! - முழுமையான விபரங்கள்!

▶ RSA கொடுப்பனவுகள் அதிகரிப்பு! - முழுமையான விபரங்கள்!

2 சித்திரை 2024 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 5088


ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பிரான்சில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமாக RSA எனப்படும் சமூகநலக் கொடுப்பனவுகள் ( Revenu social minimum) அதிகரிக்கப்பட்டுள்ளன. 

4.6% சதவீதத்தால் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு தானியங்கி முறையில் இந்த கொடுப்பனவுகள் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தனி ஒரு நபருக்கான கொடுப்பனவு €28 யூரோக்கள் அதிகரித்துள்ளது. €607.75 யூரோக்களில் இருந்து தற்போது €635.71 யூரோக்களாக அதிகரித்துள்ளது. 

ஒரு தங்கிவாழ்பவர் இருந்தால் (bénéficiaire avec) கொடுப்பனவு €953.56 யூரோக்களாகவும், இருவர் தங்கி வாழ்பவர்களாக இருந்தால் €1144.28 யூரோக்களாகவும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கு (adultes handicapés) வழங்கப்படும் கொடுப்பனவுகளும் (AAH) அதே சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதுவரை €971.37 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தொகை €1,016 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்