'இந்தியன் 2' ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

2 சித்திரை 2024 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 8773
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக ’இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்டது.
’இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் மே 24ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1