உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்

2 சித்திரை 2024 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 7613
2024யில் மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய உள்ளன.
இந்த குழுவானது உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய 7 நாடுகளை கொண்டதாகும். இவற்றில் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை WHR (World Happiness Report) கணக்கிட்டுள்ளது.
இதில் கனடா 2வது இடத்தை (G7 நாடுகளில்) பிடித்துள்ளது. இது எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க கனடா 15வது இடத்தில் உள்ளது. ஆனால், இதில் ஏனைய அனைத்து G7 நாடுகளையும் விட உயர்ந்த இடத்தில் (2ஆம் இடம்) கனடா இருக்கிறது.
30 வயதிற்குட்பட்டவர்களின் பிரிவில் கனடா 5வது இடத்தில் உள்ளது. இதில் G7 நாடுகளின் அமெரிக்கா, ஜப்பான் பின்தங்கியுள்ளன.
அதேபோல் 30 முதல் 44 வயது வரை பிரிவில் கனடா 7யில் 4வது இடத்திலும், 45 முதல் 59 வயது வரை பிரிவில் கனடா 7யில் 2வது இடத்திலும் உள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் கனடா 7யில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின் 2024 பதிப்பு 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ''வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மற்றும் வெவ்வேறு தலைமுறைகளில் உள்ளவர்களின்'' மகிழ்ச்சியை மதிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1