பின்லாந்தில் பாடசாலையின் மீது துப்பாக்கி சூடு
2 சித்திரை 2024 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 11409
பின்லாந்து நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்து நாட்டின் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டில் சிலர் படுகாயமடைந்து இருப்பதாக பின்லாந்து பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நேரப்படி, காலை 8.08 மணியளவில் Vantaa என்ற பகுதியில் உள்ள Viertola தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காயம்பட்டவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் ஆரம்பகட்ட தகவல்கள் என்பதால், உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
இந்நிலையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து விலகி இருக்கும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan