பரிஸ் : கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் - அதிகளவு மழை பதிவு!
2 சித்திரை 2024 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 15421
இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து மார்ச் 31 ஆம் திகதி வரை பரிசில் 222 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. பரிசில் கிட்டத்தட்ட நாள்நோறும் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மழை பதிவானது கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ளது. முன்னதாக 1995 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 250 மில்லிமீற்றர் மழை பதிவாகியிருந்தது.
பரிசில் மிகவும் வறண்ட வருடமாக 2012 ஆம் ஆண்டு பதிவானது. அவ்வாண்டு 44 மில்லிமீற்ற மழை மட்டுமே பதிவானது.
அதேவேளை, கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் மூன்று மாதங்களின் சராசரி மழை வீழ்ச்சி 133 மில்லிமீற்றாகும். இவ்வருடம் 222 மி.மீ மழை பதிவானது.


























Bons Plans
Annuaire
Scan