ஹீரோவாகும் வனிதா விஜயகுமாரின் மகன்...

2 சித்திரை 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 6166
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஜோவிகாவுக்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பிரபலம் ஆகி உள்ளார் என்பதும் அவர் பார்த்திபனின் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் இருப்பதாக இருப்பதாக தெரிகிறது. 22 வயது விஜய் ஸ்ரீஹரி, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஜோவிகாவுக்கு முன்பே அவரது சகோதரர் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.