இலங்கை பாடசாலை மாணவிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
2 சித்திரை 2024 செவ்வாய் 13:44 | பார்வைகள் : 12118
பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார துவாய்களை (சானிட்டரி நாப்கின்) வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் காணப்படும் நிலையில் அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பருவமடைந்துள்ளனர்.
வசதியற்ற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமையில் வாடும் மாணவிகளைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 800,000 மாணவிகளுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து இலவசமாக சுகாதார துவாய்களை வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்மொழிந்திருந்த நிலையில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாணவிகளுக்காக 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan