Paristamil Navigation Paristamil advert login

பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க.,: அண்ணாமலை

பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க.,: அண்ணாமலை

3 சித்திரை 2024 புதன் 02:46 | பார்வைகள் : 8116


பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க.,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று ஆனைகட்டி, சின்னதடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி., ஒருவர் உரிமைத் தொகை பெறும் பெண்கள், மினுக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறுகிறார். இலவச பஸ் பயணம் செல்லும் பெண்களைப் பார்த்து, 'ஓசி' என தி.மு.க., அமைச்சர் ஒருவர் பேசுகிறார்.

ஆனால், மத்திய அரசு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நன்மை பெற, பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது. ஒரு நாளும் மக்களை, பெண்களை பார்த்து கடுஞ்சொல் பேசியது இல்லை.

இந்த தேர்தலில், பொதுமக்கள் இதுவரை ஓட்டளித்த கட்சிகளை விட்டுவிட்டு, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். நாட்டின் பிரதமரமாக மோடி மீண்டும் வரவேண்டும் என, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் விரும்புகின்றனர், என்றார்.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்