ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்கிய இஸ்ரேல்! 8 பேர் பலி
3 சித்திரை 2024 புதன் 09:37 | பார்வைகள் : 3967
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் புரட்சிப் படையின் முக்கிய தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான யுத்தம் உக்ரம் அடைந்து, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சிரியா, ஈரான் நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இதன் வெளிப்பாடாக, சிரியாவில் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே கடந்த 30 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரான் புரட்சிப் படையின் முக்கிய தளபதியான முகமது ரெஜா ஜாஹேத் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை சர்வதேச உதவியை நாடியுள்ளது.