தாய் வெளிநாட்டில் இலங்கையில் சிறுமிக்கு நேர்ந்த கதி

12 ஆவணி 2023 சனி 10:53 | பார்வைகள் : 7384
ஒன்பது வயது மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், இரணவில மேற்கு, சமிந்துகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை உயிரிழந்த மாணவியின் வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாணவியின் தாயார் கடந்த 2 வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், மாணவியின் தந்தையார் சம்பவதினம் தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மாணவியின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அலாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .