Paristamil Navigation Paristamil advert login

உலகம் எப்படி அழிந்தது? பூமிக்கு ஒரு கருப்புப் பெட்டியை உருவாக்கும் விஞ்ஞானிகள்

உலகம் எப்படி அழிந்தது? பூமிக்கு ஒரு கருப்புப் பெட்டியை உருவாக்கும் விஞ்ஞானிகள்

3 சித்திரை 2024 புதன் 10:16 | பார்வைகள் : 2222


பருவநிலை மாற்றம் பூமியில் மனிதகுலத்தை அழித்து விட்டால், வருங்கால சந்ததியினர் அல்லது வேற்று கிரகத்தில் இருந்து வருபவர்கள் அதை எப்படி அறிவார்கள்?

இந்தக் கேள்விக்கு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர். அவர்கள் பூமிக்கு ஒரு கருப்பு பெட்டியை (Earth's Black Box) உருவாக்குகியுள்ளனர்.

32-அடி உயரமுள்ள எஃகு தூபியில் காலநிலை மாற்றத் தரவை தொடர்ந்து பதிவுசெய்து சேமிப்பதற்குத் தேவையான ஹார்ட் டிரைவ்கள் (Hard Drives) உள்ளன.

இந்த கருப்புப் பெட்டி கிரகத்தின் மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளைப் பற்றி சொல்லும் என கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்திலிருந்து மனிதகுலம் எவ்வாறு பாரிய பேரழிவைத் தடுக்கத் தவறிவிட்டது என்பதை விளக்கும் ஒரு பக்கச்சார்பற்ற ஆவணத்தை வழங்கும்.

இந்த கருப்புப் பெட்டியைச் சுற்றி யாராவது இருக்கும் வரை அல்லது அதை அணுகும் வரை, ஆவணத்தை மீட்டெடுக்க முடியும் என கூறப்படுகிறது.

அமெரிக்க திரைப்பட இயக்குநர் Stanley Kubrick-கின் அறிவியல் புனைகதை திரைப்படமான '2001: A Space Odyssey'யில் உள்ள மர்மமான Monolith தூண் போல இந்த கருப்புப் பெட்டி இருப்பதாக கூறுகின்றனர்.

அவுஸ்திரேலிய மார்க்கெட்டிங் நிறுவனமான Clemenger BBDO, Tasmania பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த லட்சியத் திட்டத்தை இயக்குகிறது.

இந்த கருப்புப் பெட்டியின் கட்டுமானம் டிசம்பர் 2021-இல் அறிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டிலேயே தொடங்க வேண்டிய திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

இந்நிலையில், இந்த கருப்புப் பெட்டியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று இந்தத் திட்டத்தின் தலைவரான கிளெமெங்கர் பிபிடிஓ தயாரிப்புத் தலைவர் Sonia von Bibra தெரிவித்தார்.

நன்கொடையாளர்கள் தேவையான நிதியை வழங்கத் தயாராக இருந்தாலும், அதற்கான விண்ணப்பம் அவுஸ்திரேலிய வரிவிதிப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

இந்தக் கருப்புப் பெட்டியின் சரியான இடம் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் அது அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஸ்ட்ரஹான்-குயின்ஸ்டவுனுக்கு இடையில் எங்காவது இருப்பதாக நம்பப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்