Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை; 4 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார்

பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை; 4 நாட்கள் தீவிர  பிரசாரம் செய்கிறார்

3 சித்திரை 2024 புதன் 10:18 | பார்வைகள் : 894


நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.  ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை உள்பட பகுதிகளுக்கு பிரதமர் மோடி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப்பின் கோவை வந்த பிரதமர் மோடி வாகன பேரணி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார். 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். 

9ம் தேதி வேலூர் செல்லும் பிரதமர் மோடி அங்கு வாகன அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கிறார். அன்று மாலை தென்சென்னை செல்லும் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜனை ஆதரித்து பிரசரம் மேற்கொண்டு வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

அதன்பின்னர், 10ம் தேதி நீலகிரி செல்லும் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக வாகன அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கிறார். அன்று கோவையில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

இதையடுத்து 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து 14ம் தேதி விருதுநகர் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்