Paristamil Navigation Paristamil advert login

குழந்தைவளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்

குழந்தைவளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்

3 சித்திரை 2024 புதன் 10:54 | பார்வைகள் : 2367


உங்கள் குழந்தை தனது செயல்களை ரகசியமாக செய்கிறது என்றால், குழந்தை செய்யும் சிறிய தவறுகளை கூட பெற்றோர்கள் பெரிதாக்கி குத்திக்காட்டி பேசுகிறார்கள் என்று பொருள்.

உங்கள் குழந்தைக்கு முன்கோபம் அதிகமாக வருகிறது என்றால், பெற்றோர் அவர்களை பாராட்டி பேசுவதில்லை என்று பொருள். அதனால் குழந்தை பெற்றோரின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறது.

உங்கள் குழந்தை பயந்த சுபாவத்துடன் இருந்தால், பெற்றோர் அவர்கள் எதையும் கேட்பதற்கு முன்பே வாங்கி கொடுக்குறீர்கள். 

அவர்கள் பாதையில் உள்ள எல்லா தடைகளையும் நீங்களே எளிதாக்கி கொடுக்காதீர்கள். தடைகளை அவர்களே தடுப்பதற்கு அவகாசம் கொடுங்கள்.

குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் மற்ற குழந்தைகளை காட்டி ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள்.

குழந்தை பொய் சொல்கிறது என்றால், குழந்தைகளை ஒவ்வொரு செயல்களுக்கு அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். குழந்தைகள் வேண்டுமென்றே பொற்றோர்களை தொந்தரவு செய்கிறது என்றால், பெற்றோர்கள், குழந்தைகளை அரவணைக்க அதாவது கட்டியணைத்து பாராட்டவே இல்லை என்று பொருள்.

குழந்தைக்கு எந்த பொருள் வாங்கிக்கொடுத்தாலும் அவர்கள் அந்த பொருள் மீது விருப்பம் கொள்ளவில்லை என்றால், பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் பொருளை வாங்க பெற்றோர்கள் விருப்பம் கொடுக்கவில்லை என்றுபொருள்.

குழந்தை சுயமாக முடிவெடுக்க தயங்குகிறது என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே குடும்பத்தார் அல்லது அனைவரது முன்னிலையிலும் அவர்களின் செயல்களை உங்களுக்கு தகுந்தார்போல் ஒழுங்குபடுத்தி உள்ளீர்கள் என்று பொருள்.

குழந்தைகள் மற்றவர்களிம் உணர்வுகளை பொருட்படுத்தவே இல்லை என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிம் உணர்வுக்கு மதிப்பளித்து பேசுவதில்லை, அவர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள் என்று பொருள்.

குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்கிறார்கள் என்றால், இந்த நடத்தையை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தோ, அல்லது குழந்தைகள் அதிகம் பழகும் நபரிடம் இருந்தோ இதனை கற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்