கனடாவில் கருத்தடை மாத்திரைகள் இலவசம்
3 சித்திரை 2024 புதன் 12:08 | பார்வைகள் : 3486
கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது, கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
ஆகவே, கருத்தடை சாதனங்களை இலவசமாக்க உள்ளோம் என எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
அத்துடன், கனடா துணை பிரதமரான Chrystia Freelandம், கனடாவில் வாழும் இனப்பெருக்க வயதிலிருக்கும் 9 மில்லியன் பெண்களுக்கும், கருவுறுதலைத் தடுக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகள், உடலுக்குள் பொருத்திக்கொள்ளக்கூடிய கருத்தடை சாதனங்கள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களுக்குமான செலவையும் கனடா அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.