சிறைச்சாலைக்கு சுரங்கம்?? - மின்வாரிய ஊழியர்கள் கண்டுபிடித்தனர்!!
3 சித்திரை 2024 புதன் 14:07 | பார்வைகள் : 9832
பரிசில் உள்ள Santé prison சிறைச்சாலைக்குள் நுழைவதற்குள் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றை மின்சாரத்துறை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பரிஸ் 14 ஆம் வட்டாரத்தின் 93 rue de la Santé எனும் முகவரியில் Enedis ஊழியர்கள் திருத்தப்பணி ஒன்றை மேற்கொண்டிருந்த போது, எதேர்ச்சையாக சுரப்பாதை ஒன்றை கண்டுபிடித்தனர். சம்மந்தமே இல்லாமல் அங்கு கைகளால் சுரங்கப்பாதை அமைக்கவேண்டிய தேவை ஏன் வந்தது எனும் சந்தேகம் எழ, அவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
அந்த சுரங்கப்பாதை 400 மீற்றரில் உள்ள Santé கைதிகள் தடுப்பு சிறைச்சாலை நோக்கி செல்வதை அவதானித்துள்ளனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு வலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan