Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!

பரிஸ் நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!

3 சித்திரை 2024 புதன் 18:00 | பார்வைகள் : 3804


கடந்த இரண்டு நாட்களாக பரிஸ் நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக (l’Hôtel de Ville) தங்கியிருந்த அகதிகள் இன்று காலை வெளியேற்றப்பட்டனர்.

150 வரையான வீடற்றவர்கள் அங்கு தார்ப்பாய்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் அவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Utopia 56 தொண்டு நிறுவனத்தில் ஊழியர்கள், காவல்துறையினர் இணைந்து இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர். அவர்கள் Besançon மற்றும் Marseille நகரங்களுக்கு இரு வேறு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

‘வாடகை செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி வாடகைக்கு குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது’ எனும் சட்டம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், அதனைக் கண்டித்தும் அவர்கள் குரலெழுப்பினர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்