பரிசில் இருந்து துரத்திச் செல்லப்பட்ட்டு Seine-et-Marne நகரில் வைத்து கைது செய்யப்பட்ட சாரதி!
3 சித்திரை 2024 புதன் 19:11 | பார்வைகள் : 4577
காவல்துறையினரிடம் இருந்து தப்பிய சாரதி ஒருவர் மிக நீண்ட தூர துரத்தலின் பின்னர், Seine-et-Marne நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 1 ஆம் திகதி பரிசின் Place de la Bastille பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சிவப்பு சமிக்ஞையை மீறி பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் சந்தேகத்திடமான குறித்த மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளது,. அதையடுத்து மகிழுந்து துரத்திச் செல்லப்பட்டது.
இந்த துரத்தல் Seine-et-Marne மாவட்டத்தின் மையப்பகுதி வரை நீடித்தது. இறுதியாக காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்தனர்.
காவல்துறையினரின் குற்றவாளிகள் பட்டியலான fiché S இல் குறித்த இளைஞனின் பெயர் இருந்ததாகவும், கடந்த மார்ச் 18 ஆம் திகதி அவர் ஈஃபிள் கோபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.