300 கிலோ எடையுள்ள ஈஃபிள் கோபுரத்தின் ‘மினியேச்சர்’! - ஒருவர் கைது!
3 சித்திரை 2024 புதன் 19:28 | பார்வைகள் : 4968
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், பரிசில் ஈஃபிள் கோபுரத்தின் மினியேச்சர்கள் (அச்சு அசல் போல தோற்றமளிக்கும் சிறிய பொருட்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட300 கிலோ எடையுள்ள ஈஃபிள் கோபுரங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். rue Poulet வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இடத்தில் இருந்து வீதிகளில் பொருட்களை போட்டு விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்குச் செல்வதாகவும், அவர்களை பின் தொடர்ந்தே மேற்படி மொத்த வியாபாரம் செய்யும் நபர் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்த வீதி வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், 1 யூரோவில் இருந்து 20 யூரோ வரை அதன் விலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இத்தகைய பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.