மத்திய பிரான்சை அடித்துச் செல்லும் வெள்ளம்! - ஐந்தாவது நாளாக சிவப்பு எச்சரிக்கை!

4 சித்திரை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7515
பிரான்சின் மத்திய மாவட்டங்களில் கடந்த ஒருவாரகாலமாக அடை மழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. பலர் இடம்பெயர்ந்து வேறு நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பலர் மின்சாரமின்றி இருளில் சிக்கி தவிக்கின்றனர்.
Yonne மாவட்டத்துக்கு இன்று ஏப்ரல் 4, வியாழக்கிழமை ஐந்தாவது நாளாக வெள்ளம் காரண்மாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு வெள்ள அனர்த்தம் பீடித்துள்ளது.
அதேவேளை, அதனை அண்மித்த மாவட்டங்களான Aube மற்றும் Côte-d'Or பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சேத விபரங்கள் கணக்கெடுப்பட்டு வருகிறது.