இரண்டாவது முறையாக ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
4 சித்திரை 2024 வியாழன் 07:47 | பார்வைகள் : 2795
ஜப்பானில் உள்ள ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் 32 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இதேவேளை, நேற்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 9 பேர் உயிரிழந்தாகவும் 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.