நிவாரண வாகனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
4 சித்திரை 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 3254
காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேலானது அதி தீவிர தாக்கதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டு நிறுவனம் சேகரித்த உணவுப் பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு எத்தகைய குழப்பமும் காரணமில்லை எனவும் தமது ஒவ்வொரு நகர்வு குறித்தும் இஸ்ரேல் இராணுவத்திடம் அறிவித்திருந்த போதும் தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் WCK தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கோரியுள்ளது. பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.