தலைவர் 171 படம் ஹாலிவுட் படத்தின் கதையா?:
5 சித்திரை 2024 வெள்ளி 08:01 | பார்வைகள் : 2597
தலைவர் 171-வது படத்தின் அறிமுக டீசர் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்திற்கு கழுகு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 வது படத்தில் பிரத்யேக போஸ்டர் வெளியானதில் இருந்து அந்த படம் பற்றி ஏகப்பட்ட பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன.
கையில் வாட்ச்சை சங்கிலியாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் டைம் ஒரு முக்கிய பங்கை வகிக்கப் போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதை வைத்து இந்த படம் டைம் மெஷின் திரைப்படமா? அல்லது வாட்ச் தங்கம் போல இருப்பதால் ஜப்பான் படத்தை போல தங்க கடத்தல் படமா என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் விஜய்க்காக ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை இன்ஸ்பயர் ஆகி லியோ படத்தை இயக்கி இருந்தார். அந்த ஹாலிவுட் படத்தில் இல்லாத பிளாஷ்பேக் காட்சிகளை தேவையில்லாமல் திணித்து படத்தின் இரண்டாம் பாதியை சொதப்பி வைத்துவிட்டார். ஆனாலும் விஜய்க்காக அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததாக கூறப்பட்டது. சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து சந்தோச படுவதற்கு ஒன்றுமே இல்லை என பேசிய நிலையில், வசூல் ரீதியாகவும் படம் தோல்வி அடைந்து விட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அடுத்ததாக ரஜினிகாந்துக்கும் அதே போல ஒரு ஆங்கில படத்துடன் தான் தற்போது லோகேஷ் கனகராஜ் வந்திருப்பதாக கூறுகின்றனர். ஹாலிவுட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான Purge படத்தை காப்பி அடித்தோ அல்லது இன்ஸ்பயர் ஆகியோதான் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்தை இயக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
லியோ படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் தழுவல் தான் என படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலேயே இதே போல தகவல்கள் கசிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இயக்குனர் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு புதிதாக கதையைக் கூட உருவாக்க முடியாமல் பல வருடங்களுக்கு முன்னதாக வெளியான ஹாலிவுட் படங்களில் இருந்து கதையை எடுத்து செய்வது சரியாக இருக்கிறதா என்றும் சினிமா வட்டாரத்தில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.