காசா மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக 12 வயது சிறுவன்
5 சித்திரை 2024 வெள்ளி 08:50 | பார்வைகள் : 1723
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்த 12 வயது சிறுவன் அந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவ உதவியாளராக பணிபுரிகின்றான் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
12 வயது ஜகாரியாஸ் சர்சாக் காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் மருத்துவ தொண்டராக பணியாற்றுகின்றான்.
காசாவில் காயமடைபவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த மருத்துவமனையின் மருத்துவர்களிற்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
நான் மருத்துவர்களிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டேன் மனப்பாடம் செய்துகொண்டேன் என சேர்செக் தெரிவிக்கின்றான்.
நான் கனுலாசை பொருத்துவேன் ஐஎவ ;திரவங்களை பொருத்துவேன் அகற்றுவேன் ஊசிகளையும் கையாள்வேன் என அந்த சிறுவன் தெரிவிக்கின்றான்.
மருத்துவ குழுக்களிடம் ஸ்கான் அறிக்கைகளை கொண்டு சென்று கொடுத்தல் தாதிமார்களிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுகின்றான். என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் இயாட் அபு ஜஹெர் தெரிவிக்கின்றார்.
அல்அக்ஷா மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் தொடர்;ச்சியாக 170 நாட்களிற்கு மேல் பணியாற்றிவருகின்றனர்இகாசாவின் உயிரிழப்புகள் காயங்கள் காரணமாக அவர்கள் அதிகளவு சுமையை சுமக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த சிறுவன் இடம்பெயர்ந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அவன் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாதிமார் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பணியாற்றுவதை பார்த்தான் என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார்.
வெளிப்படையாக தெரிவிப்பதென்றால் இந்த குழந்தை மிகவும் உயர்குணம் படைத்தது என அவர் தெரிவிக்கின்றார்.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக 364 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது.
நான் வளர்ந்ததும் மருத்துவனாவேன் என்கின்றான் 12 வயது ஜகாரியாஸ் சர்சாக் யுத்தம முடிந்ததும் என நம்பிக்கை வெளியிடும் அவன் நாங்கள் சிறுவர்கள் குறித்து அச்சமடைந்துள்ளோம் அவர்கள் அச்சத்தினால் நடுங்குவதை பார்ப்பது மனக்கவலையை அளிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றான்.
கடவுள் அருள்புரிந்தால் நாங்கள் விரைவில் வீடு திரும்பலாம் என அவன் தெரிவிக்கின்றான்.
நீங்கள் ஒரு நாயகன் என 12 வயது சிறுவனின் கரங்களை பிடித்து அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோவில் காணமுடிகின்றது.
நீங்கள் ஆற்றுகின்ற தொண்டர் பணியை உலகின் சில நாடுகள் புரிவதில்லை என அந்த சிறுவனிடம் தெரிவிக்கும் அவர் அந்த சிறுவனை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுகின்றார்.
இதேவேளை இந்த சிறுவன் குறித்து ஏபிசி நியுஸ் விபரங்களை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நான் வழமையாக எனது சகோதரர்களுடன் விளையாடுவேன் அல்லது பள்ளிப்பாடங்களை படிப்பேன் என தெரிவிக்கும் 12வயது ஜகாரியா சர்சாக் எனக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்கின்றான் அதற்கு பதில் அவன் காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனையின் ஒரு அவசரசேவை பிரிவிலிருந்து மற்றுமொரு அவசரசேவை பிரிவி;ற்கு ஒடிக்கொண்டிருக்கி;ன்றான்.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றவும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவன் அம்புலன்ஸ் பணியாளர்களுடன் இணைந்து தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளிற்கு விரைகின்றான்.
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசாவின் நம்பமுடியாத இளம் மருத்து தொண்டரான ஜகாரியா சர்சாக் ஒக்டோர் ஏழாம் திகதிக்கு பின்னர் தான் நாளாந்தம் சந்திக்கும் அனுபவங்கள் தனது வயதுக்கு சற்று அதிகமானவை என தெரிவித்தான்.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஏவுகணை மற்றும் தரை தாக்குதல் காரணமாக ஜகாரியாவின் தாயகம் தலைகீழாக புரட்டிப்போட்டது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் தற்போது 32000 உயிர்களை பலியெடுத்துள்ளதுஇஎன ஹமாசின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.74000 பேர் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளனர்.
தனது உதவியை ஏனைய அம்புலன்ஸ் பணியாளர்கள் வரவேற்கின்றனர் என அவர் தெரிவிக்கின்றார்.
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் ஜகாரியாவின் வயதை உடையவர்கள் அல்லது குறைவான வயதினர்.
அதிகரிக்கும் மந்தபோசனை மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 13000 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
காசா சிறுவர்களிற்கான பிரேதப்பெட்டி போல மாறிவிட்டது என யுனிசெவ் அதிகாரியொருவர் கடந்த வாரம் தெரிவித்தார்.
தியாகிகளின் உடல்களை நாங்கள் பொறுப்பேற்போம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் மீண்டும் காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை கொண்டு செல்வதற்காக அந்த இடத்திற்கு செல்வோம் என்கின்றான் ஜகாரியா.
ஒருநாள் ஜகாரியா டெய்ர் அல் பலாவில் உள்ள அக்அக்ஸா மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்குள் கையுறைகளை அணிந்தவாறு சென்றான் மருத்துவர்களிடம் உரையாடினான்இ அம்புலன்ஸில் தேவையான பொருட்களை வைத்திருப்பது குறித்து ஆராய்ந்தான் அதன் பின்னர் பான்டேஜ்கள் உட்பட தேவையான பொருட்களுடன் வந்த அவன் அவற்றை அம்புலன்சில் வைத்தான்.
தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்ததும் அவன் அம்புலன்சில் முன் ஆசனத்தில் அமர்ந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்தான்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தவேளை அவன் ஸ்டிரெச்சரில் இருந்து காயமடைந்தவரை அகற்ற உதவினான்.காயமடைந்தவரை உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டுசென்றான்.
நான் சிறிது அச்சமடைகின்றேன் காயமடைந்த எவரையாவது பார்க்கும்போது இதயம் கனக்கின்றது என அவன் தெரிவித்தான்.
ஏனையவர்களிற்கு உதவுவது யுத்தத்தினால் தனது குடும்பம் இடம்பெயர்ந்த வேதனையை சமாளிக்க உதவுகின்றது என அவன் தெரிவித்தான்.
தனது வீட்டிற்கு வெளியே டாங்கியொன்று காணப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடி அல்அக்சா மருத்துவமனையில்தஞ்சமடைந்ததாகவும் ஜகாரியா தெரிவித்தான்.
நான் மருத்துவர்களுடன் பழகத்தொடங்கினேன் என தான் மருத்துவ தொண்டராக மாறியது குறித்து அவன் தெரிவித்தான்.
நன்றி வீரகேசரி